12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தேர்வு மையங்களில் நேரில் ஆய்வு செய்தார்
தமிழகத்தில் 2025 – 26 ம் கல்வி ஆண்டுக்கான 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 2 ம் தேதி தொடங்கியது. முதல் நாளான 2 ம் தேதி மொழிப்பாடமான தமிழ் பாடத் தேர்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 2 நாட்கள் இடைவெளி விட்டு இன்று மொழிப்பாட ம் ஆங்கிலம் தேர்வு நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இஆப நேரில் ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை T.D.T.A. P.S. பெரியநாயகம் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், அங்கு மாணாக்கர்கள் தேர்வு எழுதுவதை நேரில் பார்வையிட்டார்.குறிப்பாக அதில் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவி சொல்வதை ஆசிரியர் எழுதுவதை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, வல்லநாடு வி.றி.வி.டி அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் மாணாக்கர்கள் தேர்வு எழுதுவதை ஆட்சியர் இளம்பகவத் இஆப பார்வையிட்டார்.

ஆய்வின் போது, தேர்வு அறைகளில் தேர்வர்களுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
பொதுத்தேர்வில் 3 வது நாளாக வரும் 09 ம் தேதி திங்கட்கிழமை வேதியியல், கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல் பாடத்திற்கான தேர்வு நடைபெற இருக்கிறது.














