உலகத் தாய்மொழி தின விழா பேச்சுப் போட்டி :
தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி மாணவி முதலிடம்
தூத்துக்குடி காமராஜ் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக உலகத் தாய்மொழி தின விழாவை முன்னிட்டு “கீழடி வரலாறா ? மறைக்கப்பட்ட உண்மையா ? என்ற தலைப்பில் நடந்த பேச்சுப்போட்டியில் வ.உ.சி கல்வியியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை கல்வியியல் முதலாமாண்டு மாணவி வசந்தகுமாரி முதலிடம் பெற்று பரிசுக்கோப்பையும், பாராட்டுச் சான்றிதழும் பெற்றுள்ளார்.

மாணவி வசந்தகுமாரிக்கு கல்லூரியின் சார்பாக செயலர் திரு.ஏ.பி.சி.வீ.சண்முகம் , முதல்வர் கனகராஜ், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்..












