கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய குடற்புழு நீக்க தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய குடற்புழு நீக்க தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண் 7 சார்பாக தேசிய குடற்புழு நீக்க தினம் 10.2.2026 செவ்வாய் அன்று கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் ஜெயா தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறை தலைவர் முனைவர்.ராம் சங்கர் முன்னிலை வகித்து பேசினார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நயினரகாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்  சுதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கருத்துரை வழங்கினார்கள்.

முன்னதாக விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் பால் மகேஷ் வரவேற்றுப் பேசினார். இறுதியாக கணிதவியல் பேராசிரியர் ஆறுமுகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் குடற்புழு நீக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடற்புழு நீக்க மாத்திரைகள் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களான திருமலை செல்வி, பேச்சியம்மாள் மற்றும் ஆசிரியர் அல்லா பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர். பால் மகேஷ் ஏற்பாடு செய்திருந்தார்.