அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

அங்கன்வாடி மையங்களுக்கு 2026 மே 1 முதல் 31ம் தேதி வரை கோடை விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மே மாதத்தில் நிலவும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு 31 நாட்களும் கோடை விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழ்நாட்டில் அங்கன்வாடிப் பணிகளின் கீழ் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களான முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு ஒவ்வோராண்டும் மே மாதம் கோடை விடுமுறை வழங்கியும், அவ்வாறு குழந்தைகள் மையங்களில், கோடை விடுமுறை வழங்கப்படும்

மே மாதத்தின் இரண்டாவது வாரம் அங்கன்வாடி உதவியாளர்களும், மூன்றாவது வாரம் முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்களும், நான்காவது வாரம் அருகிலுள்ள குழந்தைகள் குறு மையங்களில் முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்களும் மாற்றுப் பணியில் பயனாளிகளுக்கு உணவூட்டும் பணிகளை எவ்விதமான இடையூறுமின்றி நிறைவேற்ற வேண்டும் .

அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மே மாதத்தில் விடுமுறை வழங்கும் பொழுது உணவூட்டும் பணிகளை மாற்று ஏற்பாட்டுடன் மேற்கொள்ளும் பொழுது அரசின் கொள்கை முடிவின்படி ஆண்டு முழுவதும் குழந்தைகள் மையங்கள் செயல்படுவதை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை காலங்களில் முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துமாவு அளவை கணக்கிட்டு 24 வேலை நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 50 கிராம் வீதம் 1200 கிராம் சத்துமாவு கோடை விடுமுறை தொடங்கும் முன்பாகவே வீட்டுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் வழங்க ஏற்பாடு செய்யப்ட உள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் அமைச்சர் கீதா ஜீவனை சந்தித்து அரசாணை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்தனர்.