தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2026-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2026 ஆண்டுக்கான (ஜனவரி-டிசம்பர்) மாணவர் சேர்க்கை தொடங்கியது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி திட்டத்தில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, மேலாண்மை, வர்த்தகம், சமூகவியல், சமூகப் பணி, பொருளாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 11 இளங்கலை படிப்புகள் மற்றும் 11 முதுகலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இவை தவிர, பல்வேறு பாடங்களில் 11 டிப்ளமோ படிப்புகள், 12 சான்றிதழ் படிப்புகள் உள்ளடங்கியவை வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில், 2026 ஆண்டுக்கான (ஜனவரி-டிசம்பர்) மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கப்பட்டது. இச்சேர்க்கையை பல்கலைக்கழக பதிவாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாணவர் சேர்க்கை பிரிவு இயக்குநர் ஆறுமுகம், மாணவர் உதவி மறும் சேவைப் பிரிவு இயக்குனர் ரவி மாணிக்கம், பாடநூல் தயாரிப்பு மறும் விநியோகப் பிரிவு இயக்குநர் பாண்டிய வடிவு ஆகியோர் பங்கேற்றனர்.
வெவ்வேறு பாடப் பிரிவுகள், அவற்றுக்கான அடிப் படைக் கல்வித் தகுதிகள், மாணவர் சேர்க்கை விதி முறைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் ( www.tnou.ac.in ) தெரிந்து கொள்ளலாம் என பதிவாளர் செந்தில் குமார் தெரிவித்தார்.












