தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா மேற்கொண்டனர்
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி மாணவ – மாணவியர்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழடி அருங்காட்சியகம், மதுரை திருமலை நாயக்கர் மஹால் மற்றும் திருப்பரங்குன்றம் போன்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா சென்று வந்தனர்.
அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பாதுகாத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருந்தது. பானைகள், இரும்பு கருவிகள், நாணயங்கள், விவசாயக் கருவிகள் போன்றவை கண்ணாடி கூடுகளில் பாதுகாக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டு இருந்தது. மாணவர்களிடையே வரலாற்று பற்றை ஊக்குவிக்கும் விதமாக அமைந்திருந்தது.

அடுத்ததாக மதுரையில் அமைந்துள்ள நாயக்கர் வம்சத்தின் புகழ்பெற்ற அரசரான திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட நாயக்கர் மஹாலை கண்டு களித்தனர். வரலாற்றுப் பெருமையை கண்டு களிக்க வந்த அயல்நாட்டினருடன் சேர்ந்து மாணவர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது வீடான திருப்பரங்குன்றத்திற்கு சென்று முருகனை தரிசித்து கல்வி சுற்றுலா உடன் ஆன்மீக சுற்றுலா வையும் மாணவர்கள் இணைத்து இனிதே நிறைவு செய்து மிகுந்த மகிழ்ச்சியுடன் மீண்டும் பள்ளி வந்து சேர்ந்தனர்.

சுற்றுலா ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, முதுகலை ஆசிரியர்கள் மரகதவள்ளி, அங்காள ஈஸ்வரி, சுப்பிரமணிய சுபாஷ் மற்றும் அருள்முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.













