புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி :
சண்முகையா எம்எல்ஏ வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை 158 மாணவ மாணவிகளுக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வழங்கினார்.
நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் தெய்வேந்திரன், பள்ளித் தலைமை ஆசிரியர் மாணிக்கம், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.













