தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் மாணவர்களின் எண்ணங்களை ஊக்கப்படுத்தும் ( Ideation Camp ) பயிற்சி முகாம் 

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் மாணவர்களின் எண்ணங்களை ஊக்கப்படுத்தும் ( Ideation Camp ) பயிற்சி முகாம் 

வ உ சிதம்பரம் கல்லூரியின் தொழில்முனைவோர் மேம்பாட்டு குழு மற்றும் நிறுவனங்களின் புதுமை கவுன்சில் இணைந்து, முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான Ideation Camp பற்றிய ஒருநாள் பணிமனைப் பயிற்சியை நடத்தியது.

மாநாட்டின் தொடக்கம் கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு – வின் ஊக்க மூட்டும் உரையுடன் ஆரம்பமானது.

பின்னர், இயற்பியல் துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் மற்றும் IQAC ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜான் பிரின்ஸ் சௌந்திரநாயகம் Design Thinking பற்றிய அமர்வை ஊக்கமளிக்கும் எண்ணங்களுடன் சிறப்பாக வழிநடத்தினார்.

வணிகவியல், பொருளியல், வணிக நிர்வாகம், வரலாறு, இயற்பியல், கணிதவியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய துறைகளில் இருந்து மொத்தம் 118 மாணவர்கள் இந்த பயிற்சியில் பயனடைந்தனர்.