தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கல்வி நிபுணர் எழிலன் கலந்து கொண்டு 12ஆம் வகுப்பு தேர்வு எழுதவுள்ள மாணவ மாணவிகள் தேர்வுக்கு எப்படி தயார் செய்வது என்றும், உயர்கல்விக்குச் செல்வது குறித்தும் எந்தெந்த பட்டப்படிப்புகளைப் படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் தெளிவாக விளக்கி கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி செய்திருந்தார்.
முதுகலை ஆசிரியர்கள் அங்காளஈஸ்வரி, சுப்ரமணிய சுபாஷ், மரகதவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.













