தூத்துக்குடி ரெங்கநாதபுரம் சி.எம். மேனிலைப் பள்ளியில் 77 வது குடியரசு தின விழா

தூத்துக்குடி ரெங்கநாதபுரம் சி.எம். மேனிலைப் பள்ளியில் 77 வது குடியரசு தின விழா

இந்தியத் திருநாட்டின் 77 வது குடியரசு தின விழா தூத்துக்குடி, ரெங்கநாதபுரம் சி.எம்.தொடக்கப்பள்ளி, சி.எம்.மேனிலைப்பள்ளி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டி இணைந்து கொண்டாடியது.

குடியரசுதின விழாவிற்கு பள்ளிச் செயலர் வள்ளியம்மாள் திருச்சிற்றம்பலம் தலைமையில் ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டித் சிட்டித் தலைவர் விக்டர் குடியரசுதின கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.

ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டி செயலர் கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று குடியரசு தின உரை நிகழ்த்தினார்.

பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்க்கு ரோட்டரி நிர்வாகிகள் பரிசுகள் வழங்கி பாராட்டினர். பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி மாணவ மாணவியர் நடனம்,பேச்சு மூலம் நாட்டுப்பற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விழாவில் பள்ளிக்குழு உறுப்பினர் சோமநாதன், பள்ளி ஆசிரியைகள், மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

மேனிலைப்பள்ளித் தலைமைஆசிரியை சங்கரேஸ்வரி வரவேற்புரை வழங்கிட தொடக்கப்பள்ளி ஆசிரியை மீனாட்சி பிரபா நன்றியுரை வழங்க நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.