கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடியரசு தின விழா
உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் 77-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக கல்லூரியின் முதல்வர் முனைவர் அண்ணாமலைசாமி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய அரசியல் சட்டத்தின் சிறப்பம்சங்கள், சுதந்திரத்தின் மதிப்பு, குடியரசு நாட்டின் குடிமக்களாக இளைய தலைமுறையினர் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்து அவர் உரையாற்றினார்.

அவரது உரை மாணவர்களிடையே நாட்டுப்பற்று மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் வகையில் அமைந்தது.
இந்த விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தேசியக் கொடியை வணங்கி, குடியரசு தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடினர். விழா முழுவதும் ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் நாட்டுப்பற்று ஆகிய கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.












