தூத்துக்குடி தெற்கு புதுத்தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 77 வது குடியரசு தின விழா
தூத்துக்குடி தெற்கு புதுத்தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 77வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி நகர்ப்புறம் வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரின்ஸ் அனைவரையும் வரவேற்றார்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜே சி ஐ பியர்ல்சிட்டியின் தலைவர் ஜனார்த்தனன், துணைத் தலைவர் செல்வ நரேஷ், பொருளாளர் ஜெனிஸ் பியர்சிஸ், மற்றும் ஆட்சி மன்ற உறுப்பினர்கள் மாரிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்களுக்கு மாறுவேட போட்டி பேச்சுப்போட்டி கட்டுரைப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜே சி ஐ பியர்ல் சிட்டியின் சார்பில் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டனர்.

சிறந்த ஆசிரியர் விருதை உஷா சாந்தினி,, அர்ப்பணிப்பு ஆசிரியர் விருதை ஜான்சிரெஜி , அலுவலக சேவை விருதினை செல்ல பெருமா , சேவை விருதை ரத்னா சந்தனமாரி ஆகியோர் பெற்றனர்.
பள்ளியின் தூய்மை பணியாளர்கள் முருகவள்ளி மற்றும் வாசுகி ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி வட்டார கல்வி அலுவலரால் பாராட்டப்பட்டார்.
ஆசிரியை பவானி பத்மா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரின்ஸ் தலைமையில் ஆசிரியர்கள் ரத்னா, ஜான்சி, ஜாய்ஸ், பவானி பத்மா, உஷா சாந்தினி, ஜான்சி ராணி ஆகியோர் செய்திருந்தனர்.












