தூத்துக்குடி வ. உ.சிதம்பரம் கல்லூரியில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக அனுசரிக்கப்பட்டது
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளான இன்று 24.01.2026 தேசிய ஒற்றுமை தினமாக (ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்) மிகுந்த தேசபக்தி உணர்வுடன் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது, “வந்தே மாதரம்” முழக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எடுத்துக்கொண்டனர் .

இந்த உறுதிமொழி வ.உ. சிதம்பரம் கல்லூரி முதல்வர் டாக்டர் வீரபாகு முன்னிலையில், திரு. ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது.
நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை காக்க தங்களை அர்ப்பணிப்பதாகவும், தேசிய ஒற்றுமையை சக குடிமக்களிடையே பரப்புவதாகவும் அனைத்து பங்கேற்பாளர்களும் மனப்பூர்வமாக உறுதிமொழி எடுத்தனர்.
தேசபக்தி மற்றும் தேசிய பெருமை நிறைந்த சூழலில் கல்லூரி வளாகத்தில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த உறுதிமொழி, தேசிய ஒருமைப்பாட்டு உணர்வுடன் மேற்கொள்ளப்பட்டது.
மாணவர்களிடையே தேசபக்தி, ஒழுக்கம் மற்றும் சமூக பொறுப்புணர்வை வளர்த்தெடுப்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
நிகழ்ச்சி முடிவில், நாட்டின் ஒற்றுமையும் உள்நாட்டு பாதுகாப்பும் உறுதியாக நிலைநிறுத்தப்படுவதற்காக தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குவோம் என்ற புதிய உறுதிப்பாட்டுடன் அனைவரும் நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.













