கோவில்பட்டி கே.ஆர்.கல்லூரி மாணவி தென் மேற்கு மண்டல பல்கலைக்கழக பளுதூக்கும் போட்டிக்கு தேர்வு

கோவில்பட்டி கே.ஆர்.கல்லூரி மாணவி தென் மேற்கு மண்டல பல்கலைக்கழக பளுதூக்கும் போட்டிக்கு தேர்வு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டி தேர்வு 16.11.2025 அன்று திருச்செந்தூர் ஆதித்தனார் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி மீராலெட்சுமி தென் மேற்கு மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான பளுதூக்கும் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

11.01.2026 முதல் 14.01.2026 வரை மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள சஞ்சீவி அகர்வால் குளோபல் எடுகேஷனல் பல்கலைக்கழத்தில் பளுதூக்கும் போட்டியில் விளையாட தகுதி பெற்ற மாணவியை, கல்லூரியின் தலைவர், துணைத் தலைவர், கல்லூரியின் தாளாளர், முதல்வர், கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பாராட்டினர்.