தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கணித தினம்

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கணித தினம்

இன்று டிசம்பர் 22, கணித மேதை இராமானுஜன் பிறந்தநாள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கணித தினம் கொண்டாடப்பட்டது.

1887-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந்தேதி தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் கணித மேதை இராமானுஜன் பிறந்தார். கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், கணிதத்தில் இராமானுஜனின் அசாதாரண பங்களிப்பைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான டிசம்பர் 22-ம் தேதியை தேசிய கணித தினமாக அறிவித்தார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22-ந்தேதி தேசிய கணித தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு, தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கணித தினம் இன்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து இராமானுஜரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கணித பயிற்சி ஆசிரியை திவ்யா இராமானுஜரின் வாழ்க்கை, அவரின் கணித கண்டுபிடிப்புகள், 1729 என்ற எண்ணின் சிறப்புகள் குறித்து விளக்கி கூறினார். அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கணித வினாடி வினா போட்டிகள் நடைபெற்றன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் கணித முதுகலைஆசிரியை பரிமளா, சரஸ்வதி, அந்தோணி ஆஸ்மின். பயிற்சி ஆசிரியைகள் உமா மகேஸ்வரி, இந்து இசக்கி, விஜயலட்சுமி. வள்ளிக்குட்டி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி ஆசிரியை விஜி நன்றி கூறினார்.