10 ம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான பொதுத் தேர்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 30.03.2026 திங்கட்கிழமை 22,121 மாணவ, மாணவிகள் எழுதினர்

10 ம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான பொதுத் தேர்வு:
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 30.03.2026 திங்கட்கிழமை 22,121 மாணவ, மாணவிகள் எழுதினர்.

தமிழகமெங்கும் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 11 ம் தேதி புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 11 ம் தேதி புதன்கிழமை முதல் தேர்வாக மொழிப்பாடமான தமிழ் பாடத் தேர்வு நடைபெற்றது.

16 – 03 – 2026 திங்கட்கிழமை ஆங்கிலம் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது.

25 – 03 – 2026 புதன்கிழமை கணிதம் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது.

இன்று நடைபெற்ற அறிவியல் பாடத்திற்கான தேர்வை தூத்துக்குடி மாவட்டத்தில் 22,121 மாணவ, மாணவிகள் எழுதினர்.

இதில் தேர்வுக்காக பள்ளியில் பயிலும் மாணவர்கள் 22,221பேரும், தனித் தேர்வர்கள் 398 பேர் என மொத்தம் 22,619 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் இன்றைய தேர்வினை 22,121 பேர் எழுதினர்.இதில் மாணவர்கள் 10,933 பேர், மாணவிகள் 11,188 பேர் உள்ளடங்குவர்.

இன்று 498 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதில் மாணவர்கள் 360, மாணவிகள் 138 பேர் ஆகும்.

இன்று தூத்துக்குடி செயிண்ட் ஜோசப் ( St.Joseph ) பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் மொத்தம் 134 மாணவிகளில் 129 மாணவிகள் தேர்வு எழுதினர். 5 மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.