தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் ( தன்னாட்சி) வேதியியல் துறை சர்வதேச கருத்தரங்கு ஏற்பாடு செய்தது. வேதியியலில் சமீபத்திய கண்டுபிடிப்புகள் குறித்த சர்வதேச கருத்தரங்கு நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்வியாளர்கள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து வேதியியல் அறிவியலின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வளர்ந்து வரும் போக்குகளை ஆராய்ந்தனர்.
கருத்தரங்கு தொடக்கத்தில் முனைவர். கார்த்திகேயன் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர் “இயற்கையிலிருந்து நானோ பொருட்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உத்வேகம்” என்ற தலைப்பில் இயற்கையிலிருந்து பெறப்பட்ட நானோ கட்டமைப்புகள் மற்றும் பொருள் வடிவமைப்பில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் பற்றிய நுண்ணறிவுகளை எடுத்துரைத்தார்.

இரண்டாவது அமர்வில் முனைவர். சுப்பிரமணியன் திருச்சிராப்பள்ளியில் உள்ள எஸ் ஆர். எம் . அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் “சிறந்த மருந்து கண்டுபிடிப்புக்கான மூலக்கூறு நறுக்குதல் மற்றும் AI- அடிப்படையிலான ADMET கணிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்தல்” என்ற தலைப்பில் மருந்து ஆராய்ச்சியை விரைவுபடுத்துவதில் கணக்கீட்டு கருவிகளின் வளர்ந்து வரும் பங்கை அவர் எடுத்துரைத்தார்.
பிற்பகலில் முனைவர் .பொன் சதீஷ்குமார் பொன்னுசாமி அமெரிக்காவின் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் இணை ஆராய்ச்சியாளர் விரிவுரையை வழங்கினார்.
கோவலென்சிக்கு அப்பால்: உயிரி மருத்துவ பொறியியலுக்கான செயல்பாட்டு கரிமப் பொருட்களின் வடிவமைப்பில் சூப்பர்மாலிகுலர் தர்க்கத்தை டிகோடிங் செய்தல்” என்ற தலைப்பில் நவீன உயிரி மருத்துவ பயன்பாடுகளில் சூப்பர்மாலிகுலர் வேதியியலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.












