பல்கலைக்கழக பளுதூக்கும் போட்டி : கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி முதலிடம்

பல்கலைக்கழக பளுதூக்கும் போட்டி :
கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி முதலிடம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கு இடையிலான பெண்களுக்கான பளுதூக்கும் போட்டி, 16-11-2025 அன்று திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்றது.

இப் போட்டியில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்தை சார்ந்த பல்வேறு கல்லூரி அணிகள் கலந்து கொண்டனர் . இதில் கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி மீரா லட்சுமி 77 கிலோ எடை பிரிவில் ஸ்னாட்ச் (snatch), 67 கிலோ மற்றும் ஜெர்க் (Jerk) 80 கிலோ என மொத்தம் 147 கிலோ எடையைத் தூக்கி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

பதக்கம் பெற்ற மாணவியை கல்லூரியின் தலைவர், துணைத் தலைவர், கல்லூரி தாளாளர், முதல்வர், உடற்கல்வி இயக்குனர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பாராட்டினார்கள்.