தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோவில் தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா
தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோவில் தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளியின் தலைமை ஆசிரியை தங்கமணி தலைமையில் SMC உறுப்பினர்கள் குழந்தைகள் தின விழாவை நடத்தினார்கள்.

அவர்களுடன் இணைந்து ஆசிரியர்கள் ஜாய்சி, ஜெரோலின்,விஜயா, அமுதா, ஹெர்மினா அக்சிலியா மோத்தா, பூமா, சுதா மற்றும் பணியாளர்கள் குழந்தைகள் தின விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் .
மேலும் குழந்தைகள் தின விழாவில் LKG முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்கள். பெற்றோர்கள் குழந்தைகள் தின விழாவில் பங்கேற்றும், கண்டு களித்தும், மகிழ்ந்தார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது













