தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோயில் தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவனுக்கு இளம் அறிவியல் கண்டுபிடிப்புகள் “INSPIRE AWARD” கிடைத்துள்ளது

தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோயில் தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவனுக்கு இளம் அறிவியல் கண்டுபிடிப்புகள் “INSPIRE AWARD” கிடைத்துள்ளது

தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் 8 ம் வகுப்பு மாணவன் ரியான் இளம் அறிவியல் கண்டுபிடிப்புகள் INSPIRE AWARD பெற்றுள்ளான்.

இதனை முன்னிட்டு அவனுடைய வங்கி கணக்கில் ரூபாய் 10,000 வரவு வைக்கப்படும். தமிழ்நாட்டில் மொத்தம் 2336 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். அதில் தூத்துக்குடி மாநகர அரசுப்பள்ளியில் இருந்து இம் மாணவன் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவன் ரியானை பள்ளித் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டினர்.