முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ( MD, MS )அகில இந்திய கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது :
நவ.6-ம் தேதி முதல் மாநிலக் கலந்தாய்வு
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது.
நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருதுவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருதுவப் பட்டமேற்படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பி வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஐஎம்எஸ்) நடத்துகிறது.
தமிழகத்தில் 25 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 2. லட்சத்து 42 ஆயிரம் பேர் எம்பிபிஎஸ் முடித்த மருதுவர்கள், நீட் தேர்வை கடந்த ஆக.3-ம் தேதி எழுதினர். தேர்வு முடிவு ஆக.19-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்தியாவில், எம்டி எம்.எஸ்., எம்.டி.எஸ் மற்றும் டிப். 2025-26-ம் ஆண்டு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது. அதன்படி, https://mcc.nic.in/ என்ற இணையதளத்தில் நவ.5-ம் தேதி நண்பகல் 12 மணி வரை பதிவு செய்ய வேண்டும். அன்றைய தினம் பிற்பகல் 3 மணி வரை கட்டணம் செலுத்தலாம். அக்.28-ம் தேதி முதல் நவ.5-ம் தேதி நள்ளிரவு 11.55 மணி வரை இடங்களைத் தேர்வு செய்யலாம். நவ.6, 7-ம் தேதிகளில் தரவரிசைப் பட்டியில் அடிபடையில் கல்லுாரியில் இடங்கள் ஒதுக் கீடு செய்யப் பட்டு, 8-ம் தேதி அதன் விவரம் வெளியாகும்.
மேலும் 9-ம் தேதி முதல் 15-ம் தேதிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும். 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை மாணவர்கள் கல்வி நிறுவனங்களை சரிபார்த்து கேட்க வேண்டும். இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வு நவ.19-ம் தேதியும், 3-ம் சுற்றுக் கலந்தாய்வு டிச.8-ம் தேதியும், இறுதியாக காலியாகவுள்ள இடங்களை நிரப்புதல் கலந்தாய்வு டிச.30-ம் தேதியும் தொடங்கவுளது.
இதேபோல் தமிழகத்தில் அகில இந்திய ஒத்துழைப்பிற்குப் போக,மீதமுள்ள 50 சதவீத அரசு இடங்கள், தனியார் கல்லூரியின் மாநில அரசு மறுநிர்வாகம் ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்ரும் ஆராய்ச்சி இயக்கம் (டிஎம்இ) நடக்கிறது. எம்டி,எம்.எஸ், டிப்ளமோ மற்றம் எம்டிஎஸ் படிப்புகள் கான 2025-26-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான மாநில கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப் பிப்பது நவ.6-ல் தொடங்குகிறது.












