தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் முத்தமிழ் மன்றம் சார்பாக பயிற்சிப் பட்டறை

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் முத்தமிழ் மன்றம் சார்பாக பயிற்சிப் பட்டறை

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் தமிழ்த்துறை முத்தமிழ் மன்றம் சார்பாக இன்று (22.10.25) “மண்ணின் கலைகளை மீட்டெடுப்போம்” என்னும் தலைப்பில் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது.

கலையின் குரல் அமைப்பு நிறுவனர் பறை கலைஞர் கலை வளர்மணி சக்திவேல் முதல் அமர்விற்கும், ஒயிலாட்டக் கலைஞர் – கலை வளர்மணி துரைராஜ்  இரண்டாம் அமர்விற்கும் பொறுப்பேற்றனர்.

கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு நிகழ்விற்குத் தலைமை வகித்தார். பல்துறையைச் சார்ந்த 50 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.