டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கருங்குளம் ஆசிரியை வனிதாவுக்கு பாராட்டு.

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கருங்குளம் ஆசிரியை வனிதாவுக்கு பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் புனித வளன் துவக்கப்பள்ளி ஆசிரியை வனிதா, தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை பெற்றுள்ளார்.

இந்த விருதை ஆசிரியர் தினத்தன்று சென்னை அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வழங்கினார்.

ஆசிரியை வனிதாவுக்கு கருங்குளம் புனித வளன் துவக்கப்பள்ளி வளாகத்தில் வைத்து பாராட்டுவிழா நடந்தது. பள்ளித் தாளாளர் அருட்தந்தை ஜாக்சன் தலைமை வகித்து வாழ்த்தினார். ஆசிரியை ஜெயமேரி வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆசிரியை வனிதா தனக்கு அரசு வழங்கிய 10 ஆயிரம் ரூபாயை பள்ளி வளர்ச்சிக்காக தாளாளரிடம் ஒப்படைத்தார்.

ஆசிரியை வனிதாவை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர் . தொடர்ந்து இனிப்பு வழங்கப்பட்டது.