தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி கோவை பி. எஸ். ஜி. ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி கோவை
பி. எஸ். ஜி. ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி பவள விழாவையொட்டி, கோயம்புத்தூரில் உள்ள
பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) ஒரு பகுதியாக, உள்தர மதிப்பீட்டு குழு (IQAC) சார்பாக ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியை 3.9.2025 அன்று மதியம் 12.30 மணிக்கு நடத்தியது.

இந்நிகழ்ச்சி அறிவியல் துறை ஆசிரியர்களுக்காக பொன்விழா அரங்கிலும், கலைத்துறை ஆசிரியர்களுக்காக டி.பி.எம் அரங்கிலும் நடத்தப்பட்டது.

பி.எஸ்.ஜி.ஆர் கல்லூரி ஆய்வுத்துறை டீன்,டாக்டர். ரமேஷ் சுப்ரமணி,, அறிவியல் துறை ஆசிரியர்களுக்காக “இணைப்புத் துறைகள்: வெற்றிகரமான திட்டங்களை உருவாக்குதல்” (“Bridging Disciplines: Crafting Winning Proposals”) என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் இணைப்புத் துறை ஆய்வுகளின் முக்கியத்துவம், ஆய்வுத் திட்டங்களைத் தயாரிக்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள், நிதி உதவிகளைப் பெறுவதற்கான வழிகள் ஆகியவற்றைப் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.

மேலும் ஆராய்ச்சி திரும்பப்பெறல் (Retraction) செயல்முறை மற்றும் அதைத் தவிர்ப்பது குறித்து விளக்கம் அளித்தார்.

பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,உதவிப் பேராசிரியர்,டாக்டர். சாருமதி, விலங்கியல் துறை, கலைத்துறை ஆசிரியர்களுக்காக “நெறிமுறை வெளியீடு – வேட்டையாடும் சஞ்சிகைகள் மற்றும் பின்வாங்கல் மேலாண்மைக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறை”.என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் சரியான ஆய்விதழைத் தேர்வு செய்வது, கொள்ளையடிக்கும் (Predatory) ஆய்விதழ்களைத் தவிர்ப்பது, அவற்றை அடையாளம் காண இணையத்தில் உள்ள கருவிகளைப் பயன்படுத்துவது ஆகியவற்றை விரிவாக எடுத்துரைத்தார்.

இரண்டு அமர்வுகளும் ஊக்கமூட்டும் விதமாகவும், பங்கேற்ற ஆசிரியர்களால் வரவேற்கக்கூடியனவாகவும் இருந்தன.