TNPSC Group 1 தேர்வு முடிவுகள் வெளியானது
2025ஆம் ஆண்டிற்கான TNPSC குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 15 ம் தேதி நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2025 ஆண்டுதோறும் பல்வேறு பதவிகளுக்கான தேர்வுகளை ஆண்டு அட்டவனைப்படி நடத்தி முடிவுகளை வெளியிடுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் TNPSC இந்த தேர்வை நடத்தி, மாநில அரசின் உயர்நிலைப் பதவிகள் தொடங்கி குரூப் 4, விஏஓ பதவிகள் வரை தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியான நபர்களை தேர்வு செய்து வருகிறது.

அந்தவகையில், இந்த 2025ஆம் ஆண்டிற்கான குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பை ஏப்ரல் 1 அன்று வெளியிட்டது. துணை ஆட்சியர் முதல் உதவி ஆணையர் வரை குரூப் 1 நிலையில் காலியாக உள்ள 70 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஜூன் 15 ம் தேதி இதற்கான முதல்நிலை தேர்வுகள் நடைபெற்றது.
இந்த தேர்வை சுமார் 2.49, 294 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 1,86,128 பேர் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 28) வெளியாகியுள்ளது.
இந்த முடிவுகளை https://tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இந்த முதல்நிலைத் தேர்வில் தேர்வானவர்களுக்கு முதன்மைத் தேர்வு சென்னையில் வருகிற டிசம்பர் 1 முதல் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதன்மை தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்கள் அடுத்து நேர்காணல் மூலம் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.












