காலை உணவு திட்டத்தினால் பயன் என்ன ? அரசு நடத்திய ஆய்வின் முடிவுகளை அரசின் செய்தித் தொடர்பாளர் அமுதா வெளியிட்டார்

காலை உணவு திட்டத்தினால் பயன் என்ன ? அரசு நடத்திய ஆய்வின் முடிவுகளை அரசின் செய்தித் தொடர்பாளர் அமுதா வெளியிட்டார்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் கடந்த 2022 செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
மொத்தம் 30,992 பள்ளிகளில் 18.50 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

தொடர்ந்து இத் திட்டம் நகரப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

காலை உணவு திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகைப் பதிவு அதிகரித்துள்ளது. தாமதமின்றி சரியான நேரத்தில் நாள்தோறும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் சோர்வின்றி பாடத்தை கவனித்து, கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்கள்.

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. பள்ளிகளில் ஆரோக்கியமான காய்கறி உணவு வழங்கப்படுவதால் வீட்டில் அதுபோன்று ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

வேலைக்கு செல்லும் பெண்கள் அவர்களின் வேலைப்பளு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பள்ளிகளில் கை கழுவி சாப்பிடும் பழக்கமும் மாணவர்களும் கொண்டுவரப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவின் அளவு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் குழந்தைகள் திருப்தி தெரிவித்துள்ளனர். மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. என அமுதா தெரிவித்தார்.