தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி நுண்ணுயிரியல் துறை சார்பில் அடிப்படை குடும்ப கணக்கெடுப்பு நடத்தினர்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி நுண்ணுயிரியல் துறை சார்பில் அடிப்படை குடும்ப கணக்கெடுப்பு நடத்தினர்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி சமுதாய மேம்பாட்டுத் திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் அமைப்பின் சார்பில் 23.08.2025 அன்று கேரரம்பள்ளம் ஊராட்சிக்குட்பட்ட பெரியநாயகிபுரம் கிராம மக்களிடம், தூய மரியன்னை கல்லூரி நுண்ணுயிரியல் துறை இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவிகள் அடிப்படை குடும்ப கணக்கெடுப்பு நடத்தினர்.

இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர். அருட் சகோதரி ஜெஸி, செயலர் முனைவர். அருட் சகோதரி குழந்தை தெரேஸ், துணை முதல்வர் முனைவர். அருட் சகோதரி எழிலரசி, சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் முனைவர். அருட் சகோதரி ஆரோக்கிய அல்போன்ஸ் ஜெனிசியஸ் மற்றும் உன்னத் பாரத் அபியான் (UBA) ஒருங்கிணைப்பாளர் முனைவர். புலோமின் ரெஜி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

நுண்ணுயிரியல் துறைத் தலைவர் முனைவர். சிலுவை கிருபாகரி அனிசியா மற்றும் பேராசிரியர்கள் சுஜித்தா மற்றும் சகிலா பாபநாசம் ஆகியோர் வழி நடத்தினர்.

கிராமத்தில் சமூக பொருளாதாரத் தகவல்களை சேகரித்து வளர்ச்சி முயற்சிகளுக்கு வழிகாட்டுவதும், மாணவர்களுக்கு சமூக பணி மற்றும் கிராம முன்னேற்றத்தில் மதிப்பு மிக்க அனுபவத்தை வழங்குவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.