தூத்துக்குடி கிங் ஆப் கிங்ஸ் பள்ளியில் 79-வது சுதந்திர தின விழா

தூத்துக்குடி கிங் ஆப் கிங்ஸ் பள்ளியில் 79-வது சுதந்திர தின விழா

தூத்துக்குடி கிங் ஆப் கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 79-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையத்தின் முன்னாள் நிகழ்ச்சித் தலைவரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட குழு உறுப்பினருமான முனைவர். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி சிறப்பு உரையாற்றினார்.

விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களை ஜாஸ்மின் வரவேற்றார். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி மற்றும் தாளாளர் ராஜம்மாள் ஆகியோர் கடந்த கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டிப் பேசினர்.

மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன. இறுதியாக ஜாஸ்மின் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர் ரூபி செய்திருந்தார்