தூத்துக்குடியில் கத்தியை கண்டும் அஞ்சாமல் பணி செய்த பெண் சார்பு காவல் ஆய்வாளர் தரணியா :
மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் பாராட்டு
தூத்துக்குடியில் கத்தியால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்தவர்களை துணிச்சலாக தடுத்து நிறுத்தி துரிதமாக செயல்பட்ட பெண் சார்பு ஆய்வாளருக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தரணியா.

நேற்று (11.08.2025) தரணியா தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்குள்ள ஒரு டீக்கடை முன்பாக இரண்டு பேர் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக் கொண்டிருந்ததை பார்த்தவுடன் துணிச்சலாக அவர்களை தடுத்து நிறுத்தி மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுத்து, காயம்பட்ட இருவரையும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து துரிதமாக செயல்பட்டார்.
இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி சம்பவத்தில் துணிச்சலாக விரைந்து செயல்பட்டு அசம்பாவிதத்தைதைரியமாக தடுத்து, காயம்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிறப்பாக செயல்பட்ட சார்பு ஆய்வாளர் தரணியாவை இன்று (12.08.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.












