MBBS – இடம் விரிவாக்கத்தில் தமிழ்நாடு முன்னிலை :
இந்தியாவில் 2024 ஆம் ஆண்டில் 2,849 – MBBS இடங்கள் காலியாக இருந்தன.
இந்தியாவில் 2024–25 ஆம் ஆண்டில் 2,849 இளங்கலை இடங்கள் காலியாக இருந்தன.
எம்பிபிஎஸ் இட விரிவாக்கத்தில் உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கின்றன.
கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் MBBS இடங்கள் 39% உயர்ந்துள்ளன – 2020–21ல் 83,275 ஆக இருந்த இந்த எண்ணிக்கை 2024–25ல் 1,15,900 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இடங்கள் இன்னும் காலியாகவே உள்ளன.

2024–25 ஆம் ஆண்டில் மட்டும், 2,849 இளங்கலை மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன என்று, ஆகஸ்ட் 1 ஆம் தேதி சுகாதாரத் துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022–23 ஆம் ஆண்டில் காலியிடங்களில் மிகப்பெரிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது, அப்போது 4,146 இடங்கள் (எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் தவிர) உரிமை கோரப்படாமல் இருந்தன. அதன் பின்னர், எண்ணிக்கை குறைந்தாலும் முற்றிலும் மறையவில்லை.
எம்பிபிஎஸ் இருக்கைகளில் முன்னிலை மாநிலங்கள் :
உத்தரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகியவை அதிக எம்பிபிஎஸ் இடங்களை வழங்கும் முன்னணி மாநிலங்கள் ஆகும்..
இந்த மாநிலங்கள் 2020–21 மற்றும் 2024–25 ஆகிய இரண்டு ஆண்டிலும் முன்னிலை வகித்தன.
அதன்படி உ.பி.யின் இடங்களின் எண்ணிக்கை 7,428 லிருந்து 12,325 ஆகவும், தமிழ்நாட்டின் இடங்களின் எண்ணிக்கை 8,000 லிருந்து 12,000 ஆகவும் உயர்ந்ததுள்ளது.












