உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம்
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தொழில் முனைவோர் கருத்தரங்கம் 23.07.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில், கல்லூரியின் தாளாளர் விஜயன் தலைமை வகித்தார். முதல்வர் டாக்டர் அண்ணாமலைசாமி சிறப்புரையாற்றி கருத்தரங்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினராக வந்திருந்த முனைவர். ஆனந்த் , “Franchise vs Startup” என்ற தலைப்பில் மாணவர்களுக்காக மிக அருமையான வழிகாட்டும் உரையை நிகழ்த்தினார்.
தொழில்முனைவோருக்கான புரிதல்களை ஏற்படுத்தும் விதமாக, உரையுடன் கூடிய கலந்துரையாடலும் நடைபெற்றது.
மாணவர்களுக்கு ஊக்கம் வழங்கும் விதமாக, விருந்தினர் பரிசுகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை, தொழில் முனைவோர் கழக ஒருங்கிணைப்பாளர்கள் அருண்குமார், வரதராஜம்மாள், ரவினா மாரி மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.












