தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி தூத்துக்குடியில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கருப்பு முக்காடு அணிந்து ஒப்பாரி போராட்டம்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி தூத்துக்குடியில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கருப்பு முக்காடு அணிந்து ஒப்பாரி போராட்டம்

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கடந்த தேர்தல் வாக்குறுதி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு எண் W p 16606 ஐ அமல்படுத்தி குறைந்தபட்ச பென்சனை அகவிலைப்படியாக வழங்கிட வலியுறுத்தி 22.07.2025 செவ்வாய் கிழமை அன்று காலையில் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் தோழர். வைஜெயந்திமாலா தலைமையில் கருப்பு முக்காடு ஒப்பாரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கருப்பசாமி செல்வம் நகரச் செயலாளர் வெனிற்றால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சண்முக லட்சுமி, மாநகரச் செயலாளர் கவிஞர்.சுந்தரி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

மாநில துணைப் பொதுச் செயலாளர் வீரபாண்டிய கட்டபொம்மன் ஒப்பாரி போராட்ட உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் ராமு நன்றி கூறினார்.