SSC – மத்திய பணியாளர் தேர்வாணையம் இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 21 கடைசி தேதி
மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (SSC) இளநிலை பொறியாளர் பணிக்கான 1340 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 21, 2025
காலிப்பணியிட விவரங்கள்:
மொத்த காலிப்பணியிடங்கள்: 1340.
பணியின் பெயர்: இளநிலை பொறியாளர் (Junior Engineer – JE).
தேர்வு செய்யும் அமைப்பு: மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (SSC).
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 21, 2025.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: htttps://ssc.gov.in.
கல்வித் தகுதி:
பொறியியல் துறையில் பட்டம் (BE) அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்முறை:
கணினி அடிப்படையிலான தேர்வு (Computer Based Examination) இரண்டு தாள்களை உள்ளடக்கியது.
தாள் 1: பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு (General Intelligence & Reasoning).
தாள் 2: குறிப்பிட்ட பொறியியல் துறை சார்ந்த கேள்விகள்.

முக்கிய குறிப்புகள்:
விண்ணப்பதாரர்கள், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முன், அறிவிப்பில் உள்ள தகவல்களை முழுமையாகப் படிக்கவும்.
மேலும் தகவலுக்கு, மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் (SSC) இணையதளத்தைப் பார்க்கவும்.
இதற்கான ஆவணங்கள் சரிபார்ப்பு வரும் அக்டோபர் மாதம் கணினி வாயிலாக நடைபெற உள்ளன.
தமிழகத்தில் சென்னை, வேலூா், கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய மையங்களில் இத் தோ்வு நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












