12 ம் வகுப்பு முடித்த தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சட்டக் கல்லூரிக்கு தேர்வு செய்யப்பட்ட 74 மாணவர்களுக்கு கோர்ட் ( Blazer ) மற்றும் சட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டது

12 ம் வகுப்பு முடித்த தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சட்டக் கல்லூரிக்கு தேர்வு செய்யப்பட்ட 74 மாணவர்களுக்கு கோர்ட் ( Blazer ) மற்றும் சட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டது

தூத்துக்குடி மாவட்டத்தில் 12ம் வகுப்பு முடித்து சட்ட கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின்கீழ் “குன்றென நிமிர்ந்துநில்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு சட்டம் பயிலும் மாணவ, மாணவியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் கனிமொழி எம்பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு சட்டப் புத்தகங்களை வழங்கினார்கள்.

இதைத்தொடர்ந்து பேசிய கனிமொழி எம்பி, சட்டக் கல்லூரியில் பயிலக்கூடிய மாணவிகள் அதிக அளவில் கலந்து கொண்டுள்ளத்தை பார்க்கும்போது தந்தை பெரியார், அண்ணா, கலைஞரின் கனவு நினைவாகிக் கொண்டிருப்பதை காண முடிகிறது. திமுக ஆட்சிக்கு வரும்போதேல்லாம் பெண்கள் படிக்க வேண்டும் என்ற வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 99 சதவீதம் மாணவ, மாணவிகள் உயர் கல்வி படிப்பதற்கு சேர்ந்துள்ளது பெரிய சாதனையாக கருதப்படுகிறது. சட்டக் கல்லூரி சேர்ந்துள்ள மாணவ, மாணவிகள் நன்கு படித்து சிறந்த வழக்கறிஞர்கள் மாறிவிட முடியும். அதையும் தாண்டி சமூகத்தை மாற்றக்கூடிய வழக்கறிஞர்களாக மாற வேண்டும்.

சட்டம் படிக்கும் மாணவிகள் இது போதும் என்று இருக்கக் கூடாது எதிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து செயலாற்ற வேண்டும். நாட்டை நல்ல சிந்தனைகளுடன் எல்லோருக்குமான நியாயங்களாக மாற்ற பாடுபட வேண்டும் என்றார்.


இதில் 74 மாணவர்களும் அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அதில் School of Excellent in Law கல்லூரியில் 4 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தேசிய சட்டக் கல்லூரி, திருச்சியில் 1 மாணவரும் மீதி 69 மாணவர்கள் அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.