தூத்துக்குடி மக்களின் நாயகன் மேயர் ஜெகன் பெரியசாமிக்கு ஆல்கேன் டிரஸ்ட் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து:
தூத்துக்குடி மாநகர் முழுவதும் தொடர்ந்து 372 வாரமாக மரங்களை நட்டி பூமியை குளிர்ச்சி படுத்துவது மட்டுமல்லாமல், காக்கா, குருவி போன்ற பறவைகளுக்கும் மரங்களை அடைக்கலமாக கொடுத்து வரும் “பசுமை நாயகர்” “நிழல் வள்ளல்” தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் இன்று தனது ஆல் கேன் டிரஸ்ட் நண்பர்களுடன் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மரங்கள் நம் கண்களை குளிர்ச்சியாக்கும் உயிரினமாகும்., அவை நமது உலகத்தை வளமான, பசுமையான மற்றும் அழகான இடமாக மாற்றுகின்றன. மரங்களை நடுவது சுற்றுச்சூழலுக்கும் உள்ளூர் மக்களுக்கும் ஏராளமான நன்மைகளைத் தருகிறது.
கிட்டத்தட்ட எல்லா தாவரங்களையும் போலவே, மரங்களும் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஒளிச்சேர்க்கையின் ஒரு பகுதியாக ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. சராசரியாக, ஒரு மரம் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 118 கிலோ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது.

மரங்களின் முக்கிய அம்சம் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுவதாகும், இது காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் நமக்கு உதவுகிறது. ஒரு மரம் ஒவ்வொரு ஆண்டும் 22 கிலோ கார்பனை உறிஞ்சி, பல நூற்றாண்டுகளாக கூட அதன் மரத்திலும் வேர்களிலும் பூட்டி வைத்திருக்கும்.
மரங்களும் காடுகளும் வனவிலங்குகளுக்கு நகரங்களைப் போன்றவை, ஆயிரக்கணக்கான உயிரினங்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்தை வழங்குகின்றது.
காக்கா,குருவி போன்ற பல பறவைகள் மற்றும் வௌவால்கள் போன்ற பல சிறிய பாலூட்டிகள், கூடு கட்டுவதற்கும், தங்குவதற்கும் மரங்களைப் பயன்படுத்துகின்றன.
நத்தைகள் முதல் பட்டாம்பூச்சிகள், சிலந்திகள் வரை எண்ணற்ற முதுகெலும்பில்லாத இனங்கள், வனப்பகுதி வாழ்விடங்களை நம்பியுள்ளன. தேனீக்கள் தேன் மற்றும் மகரந்தத்திற்காக பூக்கும் மரங்களை தேடிச் செல்கிறது.
இந்த விலங்குகள் அனைத்தும், மரத்தை பல்வேறு வழிகளில் பயன்படுத்தி, உணவுச் சங்கிலியில் மேலும் பிற உயிரினங்களுக்கு உணவை வழங்குகின்றன.













