கோவில்பட்டி கே. ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான பயிற்சிப் பட்டறை

கோவில்பட்டி கே. ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான பயிற்சிப் பட்டறை

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) உடன் இணைந்து, ஒருநாள் தொழில் முனைவோர் பயிற்சி பட்டறை ஜூன் 28, 2025 அன்று நடை பெற்றது. இந்த நிகழ்வு, மாணவர்களின் தன்னம்பிக்கையும்,  புதுமை சிந்தனையை வளர்க்கும் வகையிலும், தொழில் முனைவோர் திறன்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் நடைபெற்றது.

“தன்னம்பிக்கைக்கும் தேசிய முன்னேற்றத்திற்கும் ஒரு கருவியாக தொழில் முனைவோர்” என்ற தலைப்பில் முனைவர். சுவைதரன் EDII-TN மாவட்ட திட்ட மேலாளர் உரையாற்றினார். தொழில் முனைவோர், தொழில் வளர்ச்சியை இயக்குவதிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், புதுமைகளை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது என அவர் விளக்கினார்.

அதனை தொடர்ந்து “படிக்கும்போதே தொடங்குதல்” என்ற தலைப்பில் கல்லூரியின் முன்னாள் மாணவி செல்வி .ஆர்த்தி, நிறுவனர் மற்றும் இயக்குனர், Envoholic Pvt. Ltd., கோவில்பட்டி உரையாற்றினார். மாணவியாக இருக்கும்போதே தனது தொடக்க நிறுவனத்தை வெற்றிகரமாக நிறுவிய பயணத்தை பகிர்ந்து, மாணவர்களை தங்களது கனவுகளை உடனடியாக முயற்சி செய்ய ஊக்குவித்தார்.

தொடர்ந்து “டிசைன் திங்கிங் மற்றும் ஐடியேஷன் பணிமனை” என்ற தலைப்பில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் உரையாற்றினார். மாணவர்கள் புதிய சிந்தனை, வாடிக்கையாளர் சார்ந்த புதுமை மற்றும் மாதிரி உருவாக்கத்தில் ஈடுபடக்கூடிய செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மாணவர்கள் பெரிதும் ஆர்வமுடன் பங்கேற்று தொழில் முனைவோர், டிசைன் திங்கிங் மற்றும் புதுமை குறித்த அருமையான அறிவைப் பெற்றனர். கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாணவர்களில் தொழில் முனைவோர் மனப்பாங்கை ஊக்குவித்து, தன்னம்பிக்கையுள்ள புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

இந்த பயிற்சி பட்டறையை கல்லூரி முதல்வரின் வழிகாட்டுதலின் படி, தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.