தூத்துக்குடி மாவட்டம் இசைப்பள்ளி மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடி மாவட்டம் அரசு இசைப்பள்ளி மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி அருள்மிகு சங்கர ராமேஸ்வர திருக்கோவில் முன்பு ஆரம்பமானது.
பின்னர் நான்கு வீதிகளிலும் பேரணி நடத்தி இசைப் பள்ளி, ஜவகர் சிறுவர் மன்றம் மற்றும் பகுதிநேர நாட்டுப்புற கலை பயிற்சி மையம் பற்றிய விவரங்களை எடுத்துரைத்ததனர்.
அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் ஐ பவுண்டேஷன் மற்றும் கலைப்பண் பாட்டுத் துறை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் பள்ளி சார்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.முகாம் இனிதே நிறைவுற்றது.













