தேசிய நல்லாசிரியர் விருது : விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

தேசிய நல்லாசிரியர் விருது :
விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

தேசிய நல்லாசிரியர் விருதிற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் https://nationalawardstoteachers.education.gov.in/login.aspx என்ற இணையதளம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

இந்தியாவில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. ஆசிரியராக இருந்து குடியரசுத்தலைவராக உயர்ந்த சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

நல்லாசிரியர் விருது பெற, ஒரு ஆசிரியர் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:

குறைந்தது 15 வருடங்கள் ஆசிரியர் பணியில் அனுபவம் இருக்க வேண்டும்.

கல்வித் துறை செயல்பாடு:

கல்வியை வணிக நோக்கில் பார்க்காமல், விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.

மாணவர் மேம்பாடு:

மாணவர்களின் இடைநிற்றலைக் குறைத்தல், சேர்க்கை மற்றும் தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரித்தல், பின்தங்கிய மாணவர்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

நன்னடத்தை:

அரசியல் தொடர்பு இல்லாதவராகவும், நற்பண்புகள் உடையவராகவும் இருக்க வேண்டும்.

தேர்ச்சி சதவீதம்:

ஆசிரியரின் கடைசி ஐந்து ஆண்டு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் கணக்கில் கொள்ளப்படும்.

குழு பரிசீலனை:
மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில், ஆறு உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, தகுதியான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.