ஸ்பேஸ் X ஆக்சியம் விண்கலம் 12.01 மணிக்கு விண்ணில் பாய்ந்தது :
தடைகளை தகர்த்து விண்வெளி பறந்தார் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா
பல தடைகளை தகர்த்து விண்வெளிக்கு பறந்தார் சுபான்ஷு சுக்லா! –
ஆக்சியம்-4 குழுவுடன், ஸ்பேஸ்-எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
டிராகன் விண்கலத்தில் இருக்கும் ஆக்சியம்-4 குழுவை சுமந்து செல்லும் ஸ்பேஸ்-எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் சரியாக இந்திய நேரப்படி 12:01 மணிக்கு நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதள வளாகம் 39ஏ-இல் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
விண்கலம் புவிவட்டப்பாதையை அடைய சுமார் 2.30 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். இதனையடுத்து டிராகன் விண்கலத்தை விட்டு ஃபால்கன் ராக்கெட் பிரிந்து பூமிக்குத் திரும்பும். இதற்காக கடலில் ட்ரோன் கப்பல்கள் தயாராக நிலைநிறுத்தப்பட்டிருக்கும்.
ராக்கெட்டில் இருந்து பிரியும் விண்கலம், அதில் இருக்கும் இரண்டாம் நிலை பூஸ்டர்கள் உதவியுடன் புவி வட்டப்பாதையின் அதிகபடியான தூரத்தைக் கடந்து செல்கிறது. பின்னர், இரண்டாம் நிலை பூஸ்டர்களிடம் இருந்து பிரியும் டிராகன் விண்கலம், சுயமாக தனக்கிருக்கும் சொந்த உந்துவிசையைப் பயன்படுத்தி, சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) நோக்கி பயணிக்கும்.
இதன் பயண நேரம், சுமார் 24 மணிநேரம் முதல் 36 மணிநேரம் வரையில் ஆகலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விண்வெளி ஆராய்ச்சியாளர் ஸ்ரீமதி பேசுகையில், ஒவ்வொரு கட்டமாக பிரிந்து செல்லும். இந்த திட்டத்தில் மீண்டும் பயன்படுத்தக் கூடிய ராக்கெட்டை பயன்படுத்தியுள்ளனர். எனவே பூஸ்டர்கள் லேண்ட் ஆகிவிடும். அதை விண்வெளி ஆய்வு மையம் வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தி கொள்ளும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பைலட் ஆக சுபான்ஷு சுக்லா இருக்கிறார். தற்போது ஆட்டோமேட்டிக் டாக்கிங் சிஸ்டம் தான் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் மேனுவல் டாக்கிங் பயிற்சியும் சுபான்ஷு சுக்லாவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரக்கூடிய 14 நாட்களும் மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொள்வர். 30 நாடுகளுக்கு சொந்தமான 60 ஆராய்ச்சிகளை 4 வீரர்களும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இது வெற்றிகரமாக முடிந்ததும் க்ரூ மாடியுலில் அமர்ந்து கொண்டு, அதன்மூலம் பூமிக்கு திரும்பிவிடுவர். இந்த மாடியுல் கலிபோர்னியாவில் தரையிறங்குமாறு திட்டமிடப்பட்டுள்ளது.
2 வது இந்திய வீரர் :
40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மற்றொரு வீரரை விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி உள்ளது.1984 ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற ரஷ்யாவின் சோயுஸ் மின்கலத்தில் முதன்முறையாக இந்தியாவைச் சேர்ந்த ராகேஷ் சர்மா பயணம் செய்தார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா 2 வது வீரரை விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியுள்ளது.












