12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு: செயலர் ஏ. பி. சி. வீ. சண்முகம் வழங்கினார்

12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு:

செயலர் ஏ. பி. சி. வீ. சண்முகம் வழங்கினார்

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு செயலர் APCV சண்முகம் கைக்கடிகாரம் பரிசு வழங்கி பாராட்டினார்.

கல்லூரியில் முன்னுரிமை:

மேலும் பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டப்படிப்பு பயில வ.உ.சிதம்பரம் கல்லூரி மற்றும் ஏ.பி.சி.மகாலட்சுமி கல்லூரியில் முன்னுரிமை வழங்கப்படுவதாக கூறினார்.

நிகழ்ச்சியின் போது தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, ஆசிரியை அங்காள ஈஸ்வரி உடனிருந்தனர்.

ஆசிரியர்களுக்கு வாழ்த்து:

10 ம் வகுப்பு, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த தேர்ச்சியை பெற்றுத்தந்த ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பரிசுகள் வழங்கி புதிய கல்வி ஆண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.