கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 ம் தேதி நாளை பள்ளிகள் திறப்பு:
மாணவர்கள், பெற்றோர்கள் உற்சாகம்,தூத்துக்குடி பஜார் களைகட்டியது.
தூத்துக்குடியில் புதியதாக பள்ளியில் சேர இருக்கும் மாணவர்களை (குழந்தைகளை ) அழைத்துக்கொண்டு தங்களது எதிர்கால கனவை படித்து நிறைவேற்ற இருக்கும் தங்களது குழந்தைகளுக்கு கல்வி பயில தேவையான உபகரணங்களை வாங்க நேற்று பஜாருக்கு ஆர்வமாக வந்தனர்.
மேலும் வகுப்பு உயர்வு பெற்று புதிய வகுப்பிற்கு செல்ல இருக்கும் மாணவர்களும் தங்களுக்கு தேவையான யூனிஃபார்ம், ஷூ, டை மற்றும் நோட்டு புத்தகங்களை வாங்குவதற்காக தங்களது பெற்றோர்களுடன் பஜாரில் உள்ள கடைகளுக்கு வந்ததால் கூடுதலாக பஜாரில் கூட்டம் அலைமோதியது.
இதனால் நேற்று தூத்துக்குடி பஜார் களை கட்டியது. எங்கு பார்த்தாலும் பள்ளி மாணவர்களின் கூட்டம் அலை கடலென திறந்து இருந்தது.வாகன நெருக்கடியால் சாலைகள் முழுவதும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அணிவகுப்பால் டிராபிக் ஆகியது.
போக்குவரத்து காவலர்கள் தங்களது பணியை ஆர்வமுடன் செய்துகொண்டு இருந்தனர்.
தூத்துக்குடி பஜாரில் உள்ள துணிக்கடைகள், நோட்டுப் புத்தகக் கடைகளில் கூட்டங்கள் அலை மோதியது. மாணவர்கள் தாங்கள் செல்ல இருக்கும் புதிய வகுப்புகளுக்கு உற்சாகமாக செல்வதற்காக தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி மகிழ்ந்தனர்.
திருவிழா காலங்களில் தீபாவளி அன்று முந்தைய நாள் பஜாரில் துணி எடுப்பதற்காக அலைகடலென திறந்திருக்கும் மக்களை போல் நேற்றும் கூட்டம் அலைமோதியது.
சில கடைகளில் தங்களுக்கு பள்ளி சீருடைகள் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மேலும் நேற்று மாத இறுதி சம்பளம் தேதி என்பதாலும் பஜார் கலைகட்ட ஆரம்பித்தது. எங்கு பார்த்தாலும் வாகனங்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கூட்டம். அவர்களும் புதிய கல்வி அண்டை வரவேற்க தயாராக இருந்தனர்.
வர இருக்கும் இந்த கல்வி ஆண்டு அனைத்து பெற்றோர்களின் கனவையும், மாணவர்களின் இலக்குகளையும் ஈடேற அவர்கள் தம் இறைவன் அருள் புரிய கல்விச் செய்திகள் டாட் காம் வாழ்த்துகிறது.














