தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் மொபைல் பழுது பார்ப்பு செய்முறை பயிற்சி
தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி, இயற்பியல் துறை, நியூ டெக்னாலஜி சால்யூஷன்ஸ், கோயம்புத்தூர் நிறுவனத்துடன் இணைந்து 12.02.2026 அன்று “திறன்பேசி பழுது பார்க்கும்” செய்முறைப் பயிற்சியை நடத்தியது.
இயற்பியல் துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் டாக்டர் ஜான் பிரின்ஸ் சௌந்தரநாயகம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

வெங்கடேஷ் மற்றும்சஞ்சய் ஆகிய பயிற்சியாளர்கள் வழங்கிய விளக்கவுரையை தொடர்ந்து, இயற்பியல் ஆய்வகத்தில் செய்முறை தொழில்நுட்பப் பயிற்சி நடைபெற்றது. பல்வேறு துறைகளிலிருந்து மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, மொபைல் பழுதுபார்ப்பு தொடர்பான செய்முறை அனுபவத்தை பெற்றனர்.













