வ.உ.சி. கல்வியியல் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய “தொல்லியல் அகழாய்வு முறைகள்” என்ற தலைப்பிலான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை 09.04.2025ல் நடைபெற்றது. ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் புதிய கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் முதலாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்.மல்லிகர் வரவேற்புரை நல்கினார். கல்லூரி முதல்வர் முனைவர்.சுப்புலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். வ.உ.சி கல்வியியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் பாபு நோக்கவுரை வழங்கினார். இப்பயிற்சிப் பட்டறையின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அலுவலர் ஆசைத்தம்பி; மாணவர்களுக்கு அகழாய்வு முறைகள் குறித்த செய்முறைப் பயிற்சியினை வழங்கினார். இந்நிகழ்வில் 100 மாணவர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு வ.உ.சி கல்வியியல் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.இராஜதுரை மற்றும் உயிரறிவியல் துறை பேராசிரியர் ரூபினா தனசுதா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். இறுதியில் முனைவர்.சிவகாமி சுந்தரி உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை (ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி) நன்றியுரை கூற பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது.












