கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் சார்பாக ஒரு நாள் கருத்தரங்கம்

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் சார்பாக ஒரு நாள் கருத்தரங்கம்

கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் சார்பாக ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முன்னிலை வகித்தார். கணினி அறிவியல் துறை முன்னாள் மாணவியும் (1998-2001 Batch), கோவில்பட்டி, ஸ்கெட்ரா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனருமான முனைவர். சிவ சங்கரி மற்றும் முனைவர். ராஜேந்திர குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு “ஹவ் டு மேக் யுவர்செல்ப் பார் பிளேஸ்மெண்ட்” என்ற தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றினார்கள். அவர்கள் தங்களது உரையில், மாணவர்கள் பயோ டேட்டாவை எவ்வாறு தயார் செய்வது என்றும், வேலைவாய்ப்பிற்காக தங்களை எவ்வாறு தயார்படுத்திக்கொள்ள வேண்டும், நிறுவனங்கள் மாணவர்களிடம் எதை எதிர்பார்க்கின்றன என்பது குறித்தும் உரையாற்றினர்.

சிறப்பு விருந்தினரை முதுகலை முதலாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி எழிலரசி அறிமுகம் செய்து வைத்தார். முதுகலை இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி பூஜா வரவேற்புரையும், இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி கிருத்திகா நன்றியுரையும் வழங்கினர். நிகழ்ச்சியை முதுகலை முதலாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவிகள் அனிதா மற்றும் மஞ்சுளா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

கல்லூரி தாளாளர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, விழா ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறைத்தலைவர், கணினி அறிவியல் துறை முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.