தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு வினாடி வினா போட்டி !

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, விலங்கியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பில் 01.09.2026 அன்று துறை அளவிலான வினாடி வினாப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன.

முதல் பரிசு:
முதுகலை இரண்டாம் ஆண்டு விலங்கியல் மாணவிகள் ஜெ. ஜஸ்மின் மற்றும் கே. பிருந்தா
இரண்டாம் பரிசு:
இளநிலை மூன்றாம் ஆண்டு. விலங்கியல் மாணவிகள் அபிநயா மற்றும் தி. சங்கரேஸ்வரி
மூன்றாம் பரிசு:
முதுநிலை முதலாம் ஆண்டு. விலங்கியல் மாணவிகள் எம். மரியா மற்றும் என். சரண்யா

டாக்டர் எஸ். பெனாசிர் பேகம் வினாடி வினா நடுவராக (Quiz Master) செயல்பட்டார்.
இந்நிகழ்வைச் ஏற்பாடு செய்த விலங்கியல் துறைத் தலைவர் டாக்டர்.ராதிகா மற்றும் துறைப் பேராசிரியர்கள் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு தெரிவித்தார்.













