தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில்
வரலாற்று துறை மற்றும் தமிழ் முழக்கம் பேரவை இணைந்து நடத்திய சிறப்பு சொற்பொழிவு கூட்டம் !
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் (தன்னாட்சி ) வரலாற்று துறை மற்றும் தமிழ் முழக்க பேரவை இணைந்து நடத்திய சுதந்திர இந்தியா ஓர் கண்ணோட்டம் என்ற சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.
முனைவர்.மரிய ஜெனிபர் தயா வரலாற்று துறை உதவி பேராசிரியர் வரவேற்பு உரை ஆற்றினா். ஓய்வு பெற்ற ஸ்கார்டு பொறியியல் கல்லூரி பேராசிரியர் முனைவர்.ஆறுமுகம் கொள்கை பரப்பு செயலாளர் தமிழ் முழக்க பேரவை , நசீர் செயலாளர் தமிழ் முழக்க பேரவை மற்றும் ரமணி பொருளாளர் தமிழ் முழக்க பேரவை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

முனைவர் செல்லப்பா தலைவர் தமிழ் முழக்க பேரவை முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விஸ்வநாதன் விருது பெற்ற தேசிய நல்லாசிரியர் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து ஜேன் டி அல்மெய்டா உதவி பேராசிரியர் வரலாற்று துறை நன்றியுரை ஆற்றினார்.
கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர். சிபானா மற்றும் கல்லூரி துணை முதல்வர் அருட் சகோதரி முனைவர்.எழிலரசி கல்லூரி துணை முதல்வர் மற்றும் கல்லூரிச்செயலர் அருட் சகோதரி குழந்தைதெரஸ் ஆகியோர் ஆசியுடன் நடைப்பெற்றது.












