கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
கணினி அறிவியல் துறை மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் சார்பாக ஒரு நாள் கருத்தரங்கம் !
கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் சார்பாக ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முன்னிலை வகித்தார். கணினி அறிவியல் துறை முன்னாள் மாணவியும், கோவில்பட்டி, மித்ராசாப்ட் சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரியும் சந்திரமதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “செயற்கை நுண்ணறிவு ப்ரோக்ராம்மரை மாற்றுமா” என்ற தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றினார்.

அவர் தனது உரையில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் அதன் தாக்கம் குறித்து விளக்கியதுடன் மாணவர்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்காக தங்களை எவ்வாறு தயார்படுத்திக் கொள்ள வேண்டும், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள் என்ன என்பன குறித்து பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் தொழில்நுட்பத் துறையில் தொடர்ந்து வளர்ந்து வரும் மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களது அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினரை முதுகலை இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி அர்ச்சனா அறிமுகம் செய்து வைத்தார். முதுகலை இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி எழிலரசி வரவேற்புரையும், முதுகலை இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவர் சுடலை நன்றியுரையும் வழங்கினர்.
நிகழ்ச்சியை முதுகலை முதலாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி ஸ்ரீதரணிகா மற்றும் முதுகலை இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி எப்சிபா தொகுத்து வழங்கினர்.
கல்லூரி தாளாளர் வழிகாட்டுதலின் படி, விழா ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறைத்தலைவர், கணினி அறிவியல் துறை முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.













