கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தொழில்முனைவோர் தின விழா!

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தொழில்முனைவோர் தின விழா!

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் வணிகவியல் (தொழில்சார் கணக்கு வைப்பு முறை) துறை சார்பில் உலக தொழில்முனைவோர் தின விழா நடைபெற்றது. இவ்விழா கல்லூரியின் முதல்வர் மற்றும் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


இவ்விழாவிற்கு வணிகவியல் தொழில்சார் (கணக்கு வைப்பு முறை) துறைத் தலைவர் வரவேற்புரை வழங்கி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி கௌரவித்தார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவரும்  பால்ட்விஸ்பட் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான மைக்கேல் ஜோன்ஸ் கலந்து கொண்டு “கல்லூரி வகுப்பறையிலிருந்து தொழில் உலகம் வரை – எனது தொழில்முனைவுப் பயணம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தனது தொழில்முனைவுப் பயண அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு வாய்ப்புகளை அடையாளம் கண்டு புதுமையான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என ஊக்கமளித்தார்.
இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக மாணவர்களிடையே தொழில்முனைவுத் திறன் புதுமையான சிந்தனை மற்றும் தொழில் தொடங்கும் ஆர்வத்தை வளர்ப்பது அமைந்தது.
நிகழ்ச்சியில் மாணவர்கள் தொழில்முனைவுத் துறையின் வாய்ப்புகள், புதிய தொழில் முயற்சிகளை உருவாக்கும் வழிமுறைகள் மற்றும் வெற்றிகரமான தொழில்முனைவோருக்குத் தேவையான திறன்கள் குறித்து அறிந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி முதல்வர் துறைத் தலைவர் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் திரளாகக் கலந்து கொண்டு பயனடைந்தனர்.