தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் தாவரம்,உயிரினப் பன்முகத்தன்மை பாதுகாப்பு மற்றும் இயற்கை சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி !

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் தாவரம்,உயிரினப் பன்முகத்தன்மை பாதுகாப்பு மற்றும் இயற்கை சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி !

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியின் தாவரவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறையின் பைட்டோ கிளப் சார்பில், மாணவர்களிடையே தாவரப் பன்முகத்தன்மை, உயிரினப் பன்முகத்தன்மைப் பாதுகாப்பு மற்றும் இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் “பைட்டோ கிளப் தொடக்க விழா மற்றும் கல்லூரி வளாகத் தாவர உலா” நிகழ்ச்சி இன்று (17.8.26) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர், தமிழ்நாடு வனத்துறையின் வனச்சரக அலுவலர் அஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். “வனங்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு” என்ற கருப்பொருளில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

துறையின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி வாயிலாக வனங்கள் மற்றும் வனவிலங்குகளின் முக்கியத்துவம், தாவரங்களைப் பாதுகாப்பதன் அவசியம், மேலும் எதிர்காலத் தலைமுறைகளுக்காக உயிரினப் பன்முகத்தன்மையைப் பாதுகாத்து, பேணிப் பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மாணவர்கள் பல்வேறு பயனுள்ள தகவல்களை அறிந்து கொண்டனர்.