கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியில் மாணவர் திறன் மேம்பாட்டுச் சிறப்பு சொற்பொழிவு விழா நடைபெற்றது !
கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் திறன் மேம்பாட்டுச் சிறப்பு சொற்பொழிவு விழா வெள்ளி விழா கலையரங்கில் நடைபெற்றது.
பள்ளித்தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார். பள்ளித்தலைவர் மற்றும் செயலர் அய்யனார் சுவாமி சிறப்பு விருந்தினர் முனைவர் இறையன்பு – க்கு நினைவு பரிசு வழங்கினார்.
பள்ளி நிர்வாகி ஜெயபிரியா அய்யனார் ஏற்புரை ஆற்றினார். பள்ளி மாணவ தலைவர் சிறப்பு
விருந்தினருக்கு பூங்கொத்து வழங்கினார்.

முன்னாள் தலைமைச் செயலாளர் முனைவர்.இறையன்பு IAS சிகரத்தை அடைய வேண்டுமென்றால் சுமைகளை தூக்கி எரிய வேண்டும் என்பது பற்றியும். வெற்றியின் விளக்கம் குறித்தும், வாழ்க்கையின் நோக்கம் பற்றியும்,
நேரத்தின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக் கூறினார்.
சிறப்பு விருந்தினர் முனைவர்.இறையன்பு IAS 2026-2027 ஆம் ஆண்டிற்கான வட்டார அளவிலான விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் கேடயமும் வழங்கி பாராட்டினார்.
மெட்ரிக் பள்ளி முதல்வர் மகாலட்சுமி நன்றியுரை கூறினார். இறுதியாக நாட்டுப்பன்னுடன் விழா நிறைவு
பெற்றது.












